பொலிஸாரிடம் தகவலை தெரிவிக்காதிர்கள் என்னிடம் சொல்லுங்கள்! மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை..!

இலங்கை மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை..!

 

நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாராருக்கு வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த தகவல்களை நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியப்படுத்துமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது குருநாகல் மாவட்ட மக்கள் முகம் கொடுத்துள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் பிரச்சினை உள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்கமைய பொரிஸாரிடம் அந்த தகவல்களை வழங்காமல் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.