இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுதல் தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
முன்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது இலங்கையிலும் , உலகளவிலும்  கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.

இருந்த போதிலும் விமான நிலையத்தை திறப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.