பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வழங்கப்படும்..ஜனாதிபதி உறுதி!! 

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!!

இலங்கையில் குறைந்த வருமான பெறுபவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக வழங்கப்படுமென ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், களுத்துறை பகுதி மக்கள் எதிர் கொள்ளும் கல்வி, விவசாயம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரம் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னெடுத்துள்ள நடைமுறைகள் குறித்து மக்கள் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் மோதல்கள் அற்றதொரு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.