வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

யாழில்  தூக்கில் தொங்கிய இளைஞர்…

அண்மையில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் நுணாவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான தங்கராசா சந்துரு என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் கொரோனா காரணமாக மீண்டும் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் சொந்த ஊரில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த இளைஞரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் நடத்தி வருகின்றனர்.