இன்று அதிகாலை பற்றி எரிந்த சஜித் பிரேமதாஸவின் கட்சி அலுவலகம்..!

பற்றி எரிந்த சஜித் பிரேமதாஸவின் கட்சி அலுவலகம்..!

இன்று அதிகாலை கம்பஹா – ஆடிமுல்லவில் அமைந்துள்ள சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ விபத்து காரணமாக 5 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சியின் திவுலப்பிட்டிய பிரதான ஏற்பாட்டாளர் ரோஸ் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த தீ விபத்தினால் அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.