நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வடக்கு, கிழக்கு,மேல், சம்பரகமுவ, வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஒரு சில பகுதிகளின் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக சீரற்ற வானிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.