யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்!

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையில் வரலாற்றில் முதன் முறைய இன்று ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளது. இதில் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பெண்ணிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ளது.

இந்நிலையில் வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் சத்திரசிகிச்சை இன்று காலை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவிக்கும் விடுதி வைத்தியர், தாய் மற்றும் குழந்தைகள் வெகுவிரைவில் வீடு திரும்புவார்கள் எனத் கூறியுள்ளார்.