இலங்கையில் சிறுவர்களின் ஆபாச காணொளிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த ஆசிரியர்..!

ஆபாச காணொளிகளை விற்பனை செய்த ஆசிரியர்..!

கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் சிறுவர்களுடைய ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளிலுள்ள சிலருக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணைகளின் மூலம் தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஆங்கில மொழி கற்பிக்கும் 54 வயதான குறித்த ஆசிரியர், திருமணம் செய்து பின்னர் மனைவியுடன் விவாகரத்து பெற்றவர் என்பதோடு, 2012ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆசிரியரின் வீட்டிலிருந்து பெருந்தொகையான உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு, சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அடங்கிய 130 காணொளிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துஷ்பிரயோகத்திற்கு இலக்கான 3 சிறுவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சந்தேகநபரால் சிறுவர்களுக்கு ட்ரோன் கெமரா பரிசளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.