கனடா – மொன்றியல் பகுதியில் ஏற்பட்ட வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி..!

கனடாவில் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி..!

கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதுடைய தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா – மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விபத்து நேற்று முந்தினம்  ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிறுமியின் தகனக்கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் அவர்கள், காலஞ்சென்ற சிவநாதன், சிவானுகூலம் தம்பதிகள், லோகாம்பிகை, காலஞ்சென்ற நவரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

சிவராமன் கிருஷாந்தினி தம்பதிகளின் ஆருயிர்ச் செல்வியும்,

சிவசக்தி(மாதுமை), சிவதீரன்(அபிஷன்), சிவரமணன்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவரது பூதவுடல் Sunday, 02 Aug 2020 காலை 9;30 மணிக்கு Rideau Memorial Gardens & Funeral Home 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, QC H9B 2A6, Canada என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் கனடிய செய்திகள் தெரிவிக்கையில்,

தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில் சிக்கிய குறித்த சிறுமி, தீக்காயங்கள் மற்றும் புகையை சுவாசித்தமை காரணமாக மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த சிறுமியின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.