இலங்கையில்  சமூகத்திற்குள் அடையாளம் கண்ட கொரோனா தொற்றாளர்! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில்  சமூகத்திற்குள் அடையாளம் கண்ட கொரோனா தொற்றாளர்!

நேற்றைய தினம் கொரோனா தொற்று உடையவர் என அடையாளம் காணப்பட்ட  பொலன்னறுவை மாவட்டம் லங்காபுர பிரதேச செயலக அலுவலக ஊழியருடன் நெருங்கி செயற்பட்ட  325 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

குறித்த ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் நெருக்கமாக பழகி செயற்பட்டவர்கள் என இனம் காணப்பட்டவர்களான 325 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவத்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 325 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூலை-31) வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்று (ஜூலை-30) உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஊழியர் பணியாற்றிய குறித்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை, அரச வங்கி ஒன்று ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.