இலங்கையில் கொரோனா தொற்றாளரினால் 450 பாடசாலை மாணவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்..!

450 பாடசாலை மாணவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்..!

பொலநறுவை பகுதியில் கொரோனா நோயாளியினால் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

லங்காபுர பிரதேச செயலகத்தில் கொரோனா தொற்று உறுதியான கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நோயாளியுடன் நெருங்கி பழகி செயற்பட்ட ஆசிரியர் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிித்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலை சென்று மாணவர்களுக்கு கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.