மட்டக்களப்பில் பொதுமலசல கூடத்திற்கு சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

வாழைச்சேனையில் நடந்த சம்பவம்…!

நேற்றைய தினம் வாழைச்சேனைப் பகுதியில் வைத்து இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பகுதியை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ய முயற்சித்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசமான செயலில் ஈடுபட்ட இந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்றைய தினம் நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெண்கள் மலசல கூடத்தினுள் சென்ற பெண்ணை கவனித்த நபர், அவரை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

வாகரை பால்சேனையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயான 23 வயதான குடும்பப் பெண்ணொருவரே வாழைச்சேனைக்கு பொருட்கள் வாங்க வந்த சமயத்தில் இந்த சம்பவத்தை சந்தித்துள்ளார்.

இந்த பெண் மலசல கூடத்திற்குள் நுழைந்ததும், சுமார் 22 வயது மதிக்கத்தக்க பிறைதுறைச்சேனையை சேர்ந்த இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து சென்று, பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார் .