வெலிகடை சிறைச்சாலை அருகே ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கண்டு பிடிக்கப்பட்ட பூனை..! 

கொழும்பில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கண்டு பிடிக்கப்பட்ட பூனை..!

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசி சிம் அட்டைகளுடன் பூனை ஒன்றை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பூனை பிடிக்கப்பட்டபோது அதன் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோய்ன், 2 சிம் அட்டைகள் மற்றும் மெமொரி அட்டை என்பன கட்டப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கமைய இந்த பூனையை யார் சிறைச்சாலைக்குள் அனுப்பியது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசிகளை சிறைச்சாலைகளுக்குள் வீசும் சம்பவங்கள், பூஸா, வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதேசங்களில் நடைபெற்று வந்தன.

இவ்வாறான செயற்பாடுகள் பிடிபட்ட நிலையிலேயே பூனையின் ஊடாக சிறைக்குள் குறித்த பொருட்களை கொண்டு செல்லும் முறை கையாளப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.