இலங்கையில் 15 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்த  பெண் ஒருவர் கைது..!

இலங்கையில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த  பெண் ஒருவர் கைது..!

மெதிரிகிரிய பகுதியில் 15 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்ணை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது பற்றி தெரிய வருவது,குறித்த 15 வயது சிறுவனும் , 29 வயது பெண்ணும் முகநூலின் மூலமாக அறிமுகமாகியிருந்தனர். அந்த பெண் திருமணமாகியிருந்தபோதும், குழந்தைகள் இருக்கவில்லை.

இருவருக்கும் முகநூல் பழக்கம் வலுவடைந்ததும், பாடசாலைக்கு செல்லும் சிறுவன் பல சந்தர்ப்பங்களில் பாடசாலை செல்லாது அந்த பெண்ணுடன் சென்று விடுவதை வழமையாக கொண்டிருந்தார். கடந்த 3மாதங்களாக இந்த தொடர்பு நீடித்து வந்துள்ளது.

பாடசாலையில் மாணவனின் வரவு ஒழுங்கற்று காணப்பட்ட விடயம் பெற்றோரிற்கு தெரிய வந்த பின்னர், மாணவனை அவதானித்தபோது, திருமணமான பெண்ணுடனான அவரது தொடர்பு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த மாணவனை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் அந்த பெண் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததும், மாணவனின் பெற்றோரினால் மெதிரிகிரிய பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலிசார் குறித்த  பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.