இலங்கையில் நீரோடைக்கு  நீராட சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

நீரோடைக்கு  நீராட சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களும் (19 வயது) இம்முறை கல்வி பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெலிவேரியா மற்றும் முடுங்கோட பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.