நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

நாட்டில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவிடின் நாட்டில் இந்த நிலை ஏற்படும் என்று, சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முணையத்தை விற்பனை செய்ய மாட்டோம் என கடிதம் மூலம் உறுதிமூலம் வழங்குவது அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என்றால் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான பொறுப்பை எங்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் அவை எந்த பலனும் அளிக்கவில்லை.

குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களிலும் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.