இலங்கையில் சமூகமட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது கொரோனா நோயாளி.!

சமூகமட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மற்றுமொரு கொரோனா நோயாளி.!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிய கொரோனா நோயாளிகள் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 6 பேர் ஐக்கிய அரபு எமிரகத்தில் இருந்து நாட்டுக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மற்ற நபர் பொலநறுவை, லங்காபுர பிரதேச செயலக அலுவலகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நபர் என குறிப்பிடப்படுகின்றது.

இதுவரையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பல மாதங்களாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணாத நிலையில், லங்காபுர பகுதியில் 3 பேர் சமூக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.