கனடாவில் நடைபெற்ற சர்வதேச விவாதப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை அணி!

சர்வதேச விவாதப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை அணி!

கனடாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வதேச பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப்போட்டியில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப்போட்டியில் கனடா வெற்றிப்பெற்றுள்ளது.

ஆனாலும் இலங்கை மாணவர்கள் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தியதாக நடுவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் குழுவினர் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக்கொண்ட சிறந்த நாடு என்ற சிறப்பையும் பெற்றுள்ளனர்.

மேலும் இலங்கையின் பாடசாலை அணியைச் சேர்ந்த ஷாலெம் சுமந்திரனுக்கும் நிகழ்வின்போது விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த விவாதம் இணையத்தின் ஊடாகவே நடைபெற்றது.

இலங்கையின் பாடசாலை அணியில் ரோயல் கல்லூரியின் ஜானுல் டி சில்வா, ஷாலெம் சுமந்திரன், கொழும்பு சர்வதேச பாடசாலையின் ராஹுல் டி சில்வா,ஜெஸ்மின் மார்கண்டு, ஆனந்தா கல்லூரியின் சாய்ன்டு ரட்நாயக்க, கொழும்பு லேடீஸ் கல்லூரியின் ரெய்ஹா விமலசேகர ஆகியோர் பங்குபற்றினர்.

சஞ்சித் டயஸ் மற்றும் கித்மினா ஹேவகே ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றினர்.