இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்.. வாகனம் கொள்வனவாளர்களுக்கு ஓர் சோகமான தகவல்!

இலங்கையில்  சந்தையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு..!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பெரும் தட்டுப்பாடான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் வெளியிட்டுுள்ளார்.

தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்பட வாகனங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டதால் புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே  கொள்வனவாளர்களால் அதிகம் கேட்கப்படும் வாகனங்களுக்கு தற்போது வரையிலும் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.