இலங்கையில் காதலனுடன் சென்ற இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம்!

காதலனுடன் சென்ற இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம்!

காதலனை மிரட்டி அவரின் முன்பே காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பாணந்துறை, பின்வத்தை கடற்கரை பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் தீவிர தேடுதலில் பிரதான சந்தேக நபர் வாதுவ வடக்கு தலப்பிட்டிய பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்ய்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சந்கே நபரிடம் இருந்து இரண்டு கத்திகளும் கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை 17 வயதுடைய காதல் ஜோடி, கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த சந்தேக நபர் முதலில் இந்த ஜோடியை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளனர்.

அதன் பின்னர் காதலனுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி மரண பயம் காாட்டி அவருக்கு முன்னாலேயே காதலியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்திய பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.