மஹியங்கனை பகுதியில் நீராடச் சென்ற இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

மஹியங்கனை பகுதியில் நீராடச் சென்ற இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

மஹியங்கனையிலுள்ள மகாவலி கங்கைக்கு குளிப்பதற்கு சென்ற இளம் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாகவும் ,இந்த சம்பவத்தில் 18வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரும் விடயம், குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக மஹியங்கனைக்கு சென்ற இளைஞன் மற்றும் யுவதி இருவரும் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர்.

இவர்கள் நீராடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நீராடியபோதே குறித்த யுவதி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்படுகின்றது.