சமூக மட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறுமி ஒருவர் அடையாளம்..! 

சமூக மட்டத்தில் சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..

நாட்டில் பொலநறுவை, லங்காபுர பகுதியில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பொலநறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமாரவங்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர் லங்காபுர பிரதேச செயலயத்தில் கடமை செய்த சிவில் பாதுகாப்பு அதிகாரியின் 5 வயதுடைய மகள் என குறிப்பிடப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் முடிவில் உறுதியாகியது.

இதனை அடுத்து அவரது மனைவி மற்றும் மகளுக்கு பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து லங்காபுர பிரதேசத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 12ஆகும் என சுகாதார பிரிவின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.