யாழ் தனிமைப்படுத்தல் முகாமில் குழந்தை பிரசவித்த தாய்..!

யாழ் தனிமைப்படுத்தல் முகாமில் குழந்தை பிரசவித்த தாய்..!

அண்மையில் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பிய நிலையில் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பெண்ணிற்கு மிகவும் ஆரோக்கியமாக குழந்தை பிறந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஜுலை மாதம் 7ஆம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்த அந்த பெண் யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது குழந்தை பிரசவிக்கும் நாள் நெருங்கும் போது அதிகாரிகள் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு வைத்தியர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது தாயும் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.