கரையோரத்தை அண்மித்த மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை..!

கரையோரத்தை அண்மித்த மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை..!

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேநேரமை் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்மித்த நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.