சமூக வலைத்தளங்கள் வழியாக தொடர்ந்தும் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை..!

சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை..!

தற்போதும் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இன்று தேர்தல் ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

“சில வேட்பாளர்கள் பிரச்சாரம் நிறைவு பெற்று 20 மணி நேரம் கழித்தும் கூட சமூக ஊடக வலைத்தளங்கள் மூலம் தங்கள் பிரச்சாரத்தை இன்னம் நிறுத்தவில்லை.

குறிப்பாக பேஸ்புக்கில் பல நகைச்சுவையான அறிக்கைகளுடன் சமூக ஊடகங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டண விளம்பரங்களை நாங்கள் கவனித்திருக்கிறோம்,” என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, தேர்தல் சட்டங்களை மீறும் வேட்பாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சமூக ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் அதிகரிக்கும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.