இலங்கையில் 660 பேருக்கு வாக்களிக்க தடை!

இலங்கையில் 660 பேருக்கு வாக்களிக்க தடை!

இலங்கையில் பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா சூழ்நிலை காரணமாக  660 பேர் வாக்களிக்க தகுதி இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவை, லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் சமூகத்தில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் நெருங்கி பழகிய 660 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்யாமையினால் அவர்களால் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த பொலநறுவை பிரதேசத்தின் சுகாதார பணிப்பாளர் சுமாரவங்ஷ,

பொலநறுவை மாவட்டத்தின் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா எனவும் கண்கானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு பூர்த்தி செய்தவர்கள் இன்று மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.