வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்து..!

வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பேருந்து விபத்து..!

நேற்றைய தினம்  பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 11.30 மணியளவில் காலியிலிருந்து உதுமக நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் ஹியாரே சந்தியில், எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டி மோதுண்டே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி கரபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.