நாசா வெளியிட்டுள்ள இலங்கையின் பிரகாசமான அரிய புகைப்படம்! 

நாசா வெளியிட்டுள்ள இலங்கையின் பிரகாசமான அரிய புகைப்படம்!

அண்மையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தென்படும் காட்சியை நாசா வெளியிட்டுள்ளது.

குறித்த புகைப்படம் கடந்த மாதம் 24ம் திகதி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த 2ம் திகதி பூமியை வந்தடைந்தனர்.

இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த மாதம் 24ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இலங்கை பிரகாசமாக தெரியும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.