இலங்கை முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை.!!

நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை.!!

நாட்டில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை முன்னிட்டு இன்றைய தினம் பாதுகாப்பிற்காக 82091 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமைதியான தேர்தலுக்காக அவசியமான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் பகுதிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அதனை மீறுவோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.