இலங்கையில் இன்று அரச விடுமுறையா?முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் இன்று அரச விடுமுறையா?முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் இன்றைய தினம் (06) அரச விடுமுறை தினம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை பொது நிர்வாக, உள்நாட்டஅலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு மாத்திரமே இன்று கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய, இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.