வாக்கு பெட்டிகளுடன் பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்..!

வாக்கு பெட்டிகளுடன் பயணித்த வான் ஒன்று விபத்து..!

நேற்றைய தினம் அம்பலங்கொட – காலி சவுன்லன்ட்ஸ் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மத்திய நிலையத்திற்கு வாக்கு பெட்டிகளுடன் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீடியாகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வான் உந்துருளி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் வாக்கு பெட்டிகள் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து தொடர்பாக மீடியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.