வாக்குச்சீட்டை தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

வாக்குச்சீட்டை தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞர் கைது..!

நேற்றைய தினம் பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வெளியிட்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்

நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.