பூநகரி பகுதியில் 8 லட்சம் பொறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

பூநகரி பகுதியில் 8 லட்சம் பொறுமதியான மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசபுரம் காட்டு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் போது வில்லடி பிரதேசத்தில் வைத்து மரக்குற்றிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் பெறுமதி 8 லட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.