ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் பதவி விலக தயார்…!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் பதவி விலக தயார்…!

இலங்கையில் நடந்து முடிந்த 2020 பொது தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய தோல்வியை பெற்றுக் கொடுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய போதே பிரபலங்களுக்கு இடையில் அவசர கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாற்று தோல்வியை சந்தித்துள்ள நிலையில் ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை பின்தள்ளி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி முன்னிலையில் உள்ளது.

நாட்டின் பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியை தழுவிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தோல்வியை தழுவியுள்ளார்.