அச்சம் இன்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அச்சம் இன்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

இலங்கையில் 2020 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

வெளியான தேர்தல் முடிவுகளுக்கமைய  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில் உள்ளது.

அதேபோல் ரணிலை பின்னுக்குத்தள்ளி சஜித் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

இந்த நிலையில் தமது கருத்தை சஜித் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக மற்றும் வளமான நாட்டிற்காக சமகி ஜன பாலவேகாவுக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) அச்சமின்றி வாக்களித்த அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி. என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.