வாக்குகள் எண்ணும் நிலையத்தில் திடீரென கை சுத்திகரிப்பு மருந்தை குடித்த தேர்தல் அதிகாரி!

கை சுத்திகரிப்பு மருந்தை குடித்த தேர்தல் அதிகாரி!

நேற்றைய தினம் தேர்தல் கடமையில் இருந்த அதிகாரி ஒருவர் திடீரென அருகில் இருந்த கை சுத்திகரிப்பு மருந்தை (sanitiser) எடுத்து குடித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை – பஸ்துன்ரட்ட என்ற இடத்தில் வாக்குகள் எண்ணும் மையத்தில் கடமையில் இருந்த தேர்தல் ஆணைய அதிகாரியே இவ்வாறு  பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில் அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் குறித்த அதிகாரி தற்செயலாகவே இதை குடித்ததாகவும், சிகிச்சையின் பின்னர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.