“எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன்”-பிரதமர் உறுதி..!

பிரதமர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி..

“எனது ஆட்சிக்காலத்தில் அனைத்து இலங்கையர்களும் ஏமாற்றமடையாத நிலையை உறுதி செய்வேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைவதற்கு ஆதரவு வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் இவ்வாறு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “எங்களது ஆட்சி காலத்தில் இலங்கை ஒருபோதும் ஏமாற்றமடையாது.

மேலும் ஜனாதிபதி மீதும் என்மீதும் முழுமையான நம்பிக்கை வைத்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்கியுள்ளனர். அதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

மேலும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மிகப்பெரும் ஆதரவை மக்கள் வழங்கியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.