திருகோணமலையில் கடற்படை வீரர் ஒருவர் திடீர் மரணம்.. கொரோனா என சந்தேகம்..!!

கடற்படை வீரர் ஒருவர் திடீர் மரணம்.. கொரோனா என சந்தேகம..!!

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நேற்று (7) மாலை மயக்க நிலை ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் பூனேவ – ஆணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த கடற்படை வீரரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.