ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் வெளியிட்டுள்ள தகவல்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் வெளியிட்டுள்ள தகவல்!

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும் தோல்வியை தழுவியுள்ளது.இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது,ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

நாட்டின் அரசியல் பாரம்பரியமிக்க ஐக்கிய தேசிய கட்சி, வரலாற்றில் முதன்முறையாக படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.