இலங்கையில் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..!!

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..

நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தலை அடுத்து பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

பொதுத்தேர்தல் நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் ஒருவார காலம் நிறைவடையும் வரையில், பேரணிகள், கூட்டங்களை நடத்த தடை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான சட்டத்தரணி ருவான் குணசேகர அறிவித்துள்ளார். தெ

அத்துடன் தேர்தலுக்கு பின்னர் பாதுகாப்பு பணிகளுக்காக இலங்கை முழுவதும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.