இலங்கை தாதா அங்கொட லொக்காவின் காதலி பற்றி வெளியான தகவல்..!

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் காதலி பற்றி வெளியான தகவல்!

இலங்கை குற்றவாளி யான அங்கொட லொக்காவின் காதலிக்கு கருக்கலைப்பு சிகிச்சை முடிந்துள்ள நிலையில் சென்னை புழல் ஜெயிலுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36).

இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த நிலையில் உறவினர் வீட்டில் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பபு காரணமாக உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை கொடுத்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர்.

இநத நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகத்தில் உள்ள பொலிசார் தீவிர விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் பின்பு உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிய வந்துள்ளது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதுவும் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது.

லொக்கா தனது காதலி அமானி தான்ஜியுடன் கோவையில் வசித்து உள்ளார்.

மேலும் அங்கொடா லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் லொக்காவின் காதலி அமானி இரண்டு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

இதையடுத்து கருக்கலைப்பு செய்ய மாத்திரைகளை உட் கொண்ட அமானி அதற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை முடிந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் இருந்த அமானி தான்ஜியின் முன்னாள் காதலனை துபாயில் அங்கொட லொக்கா கொலை செய்தார் என்றும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

அந்த ஆத்திரத்தில் இருந்த அமானி தான்ஜி திட்டம் தீட்டி அங்கொட லொக்காவுடன் நட்புறவுடன் இருந்து உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.