மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி..!

மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி..!

Sri Lanka’s newly appointed Prime Minister Mahinda Rajapaksa gestures during the ceremony to assume duties at the Prime Minister office in Colombo, Sri Lanka October 29, 2018. REUTERS/Dinuka Liyanawatte

இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றி ஈட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பல வருடங்களுக்கு எதிரணியாக இருப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவி ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த அரசியல்வாதி விரைவில் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.