நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுலாகுமா..?வெளியான தகவல்!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமுலாகுமா?

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ள நிலையில் இலங்கையின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

அவர் இதனை கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் போது 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் சுகாதார வழி முறைகளுக்கு அமைய நாடு முழுவதும் நடைபெற்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர், ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஆகியோர் வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல சுகாதாரத் துறையினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நாடு சுகாதார ரீதியில் பாதுகாப்பாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை இல்லை என அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.