ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு..!ரணிலின் அதிரடி தீர்மானம்!!

ரணிலின் முக்கிய தீர்மானம்!

இலங்கையில் இம்முறை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து அக் கட்சியை மறுசீரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மறுதினம் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து ஆலோசிக்கவுள்ளதுடன் இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

நேற்று கட்சி கூடிய போது கட்சி தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு தான் விரும்பவில்லையெனவும் கட்சிக்குள் தற்போது இருக்கும் சிறந்த ஒருவருக்கு பதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் இதன்படி அவர் யார் என்பது தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக ருவான் விஜேவர்தனவுக்கு அந்த பதவியை வழங்குவது தொடர்பாக கட்சிக்குள் சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.