கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கட்டுநாயக்க விமான நிலையம்…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் புதிய அமைச்சரவை தெரிவின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தீர்மானித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி அறிவித்துள்ளார்.

அத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இலங்கை வருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கு அமைய இரண்டு விமானங்கள் மூலம் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அத்துடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.