மரண வீட்டிற்கு செல்லும் வழியில் தாய், மகனுக்கு நேர்த்த சோகம்..!!

திருகோணமலை – ஹொரவ்பொத்தான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம்.!

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் மதவாச்சி பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த தாயும், மகனும் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பன் குளத்திலிருந்து கந்தளாய் நோக்கி மரண வீடு ஒன்றுக்கு தாயும், மகனும் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது குறுக்கே வந்த எருமை மாட்டுடன் மோட்டார்சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் தாயும், மகனும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கந்தளாய் கல்மெடியாவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 30 வயதுடைய மகனும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.