கொழும்பில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைது..!

கொழும்பில் ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் கைது!

பொரளையில் ருகுணுகலா மாவத்த பிரதேசத்தில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரத்மலான பகுதியில் வைத்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.