ராஜபக்ச சகோதரர்களின் வெற்றிக்கான முக்கிய காரணம்..!

ராஜபக்ச சகோதரர்களின் வெற்றியின் காரணம்!

ராஜபக்ச சகோதரர்களிடையே காணப்படும் பாசமுமம் ஒற்றுமையுமே அவர்களது ஒவ்வொரு வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

இதனை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே என ஏக்கமாக இருக்கிறது..!

பிறப்பால் “அண்ணா” என கூட வந்தவர்களும் சரி, இடையில் “அண்ணா” என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள்..?

“ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்” என்று எவரும் சொல்லலாம்.

ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை.” என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.