பிரித்தானியாவில் இலங்கை தமிழர் செய்த கொடூர செயல்- 8 வருட சிறை தண்டனை!!

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு 8 வருட சிறை தண்டனை!

பிரித்தானியாவில் பெண் ஒருவரை மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் Portslade, Brighton பகுதியில் வசிக்கும் 40 வயதான Peraslingam Nanthvavaraman என்பவருக்கே 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகம் ஒன்றின் மேலாளரான பணியாற்றிய இலங்கை தமிழர் தனது பணியிடத்தில் வைத்து இந்த செயலை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கின் போது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் பணியாற்றும் உணவகத்திற்கு வந்த இளம் பெண்ணை விருந்து ஒன்றிற்கு அவர் அழைத்துள்ளார். எனினும் அங்கு விருந்தில் குறித்த பெண் மாத்திரமே இருந்துள்ளார். இதன் போது பெண்ணிற்கு மதுபானம் வழங்கிய இலங்கையர் இரண்டாவது முறையும் குடிக்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதாக கூறி அந்த பெண்ணை நம்ப வைப்பதற்கு இலங்யைர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த சீசீடீவி கமராக்களையும் அவர் செயலிக்க செய்து கதவுகளையும் மூடியுள்ளார்.

அத்துடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பெண் சுயநினைவை இழந்த நிலையில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

சம்பவத்தின் போது அவ்விடத்திற்கு வந்த பெண்ணின் காதலன் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பெண்ணிற்கும் இலங்கையருக்கும் மேற்கொண்ட DNA பரிசோதனையில் அவர் மோசமாக நடந்துக் கொண்டமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது அந்த உணவகத்தில் 3 சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவது தெரியவந்துள்ளதுடன், இந்த இலங்கையரின் குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, கொடூர தாக்குதல் மேற்கொண்ட உட்பட பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பிணை வழங்குவதற்கு முன்னர் அவரது தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையாவது அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர் ஆபத்தானவர் என கருதப்படுகின்றமையினால் தண்டனை காலங்களின் பின்னர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.