நேற்றைய தினம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 446 இலங்கையர்கள்!

நேற்றைய தினம் நாடு திரும்பிய இலங்கையர்கள்..!

பரிஸ் நகரில் இருந்து இலங்கையர்களை ஏற்றி வத்தத விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் 446 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் டுபாயிலிருந்து 422 இலங்கையர்களை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த விமானம் நேற்று மாலை 4.30 மணியளவில் மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அத்துடன் சிங்கப்பூரில் தங்கியிருந்த 16 பேரும் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 12.55 மணியளவில் பிரான்ஸின் பரிஸ் நகரில் இருந்து 8 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.